திரையுலக வில்லன் மாரடைப்பால் திடீர் மரணம் !!
திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு என்கிற ராஜ்குமார் (வயது 70).
இவர் தெலுங்கில் பைரவ தீபம் படத்தின் மூலம் பாலகிருஷ்ணா என்ற கதாப்பாத்திரம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விஜய ரங்கராஜுவிற்கு வியட்நாம் காலனி எனும் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்த நிலையில் இதன்மூலம் மலையாளத்திலும் பிரபலமானார்.
நடிகர் விஜய ரங்கராஜுவிற்கு தீக்ஷிதா மற்றும் பத்மினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார், சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது.
பிறகு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜய ரங்கராஜும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருடைய மரணம் திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.