பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட மீசைய முறுக்கு பட நடிகர் !!!
By : King 24x7 Angel
Update: 2024-06-13 08:39 GMT
நடிகர் பிரதீப்
தெகிடி, மீசைய முறுக்கு, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் குண சித்தர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரதீப்.
இவர் சென்னை பாலவாக்கத்தில் தனியாக ரூம் எடுத்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் அவரது வீடு இரண்டு நாட்கள் திறக்காமல் இருந்த நிலையில், அவருடைய நண்பர்கள் கோட்டூர்புரம் காவல்துறையை அணுகி பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் பிரதீப் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.
இவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் வேறு ஏதாவது பிரச்சனைக்காக அவர் மருந்துகள் உட்கொண்டாரா என்று எந்த தகவலும் தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.