என் விவாகரத்து பர்சனல் மேட்டர் அதை பற்றி பேச வேண்டாம் - சமந்தா !!

Update: 2024-10-03 05:22 GMT
என் விவாகரத்து பர்சனல் மேட்டர் அதை பற்றி பேச வேண்டாம் - சமந்தா !!

சமந்தா 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு KTR தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் பேச்சுக்கு சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்ற நிலையில் நாகார்ஜூனா, நாக சைதன்யா உட்பட பலரும் அவருக்கு கோபமாக கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பற்றி சமந்தா தற்போது இன்ஸ்டாவில் கோபமாக பதிவு ஒன்றை வெளியீட்டுள்ளார்.

"என் விவாகரத்து பர்சனல் மேட்டர், யாரும் அதை பற்றி பேச வேண்டாம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் அதை பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்பதற்காக அதை தவறாக பேசாதீர்கள்." என் பெயரை உங்கள் அரசியல் பிரச்சனையில் இழுக்காதீங்க."

"நான் இதுவரை அரசியல் சார்பில்லாமல் தான் இருக்கிறேன், அதே போல தான் இருக்க விரும்புகிறேன்" என சமந்தா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News