ஜப்பானில் கோலாகலமாக நடந்தது நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் !!
முறுக்கு மீசை, உயரம் கிராமத்து பாஷையில் பேசி கலக்கி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
1980-ல் சினிமாவில் களமிறங்கியவர் அப்படியே அரசியல் பக்கமும் வந்தவர் அதிலும் கலக்கி வந்தார். அமெரிக்காவுக்கு சென்று தொழிலதிபரானார். சினிமாவில் இருந்து வேறு துறைகளுக்குச் சென்றாலும் திறமையிருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக நெப்போலியன் திகழ்கிறார்.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீல் சேரில் அமந்தபடி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமண பேச்சுகள் தான் அதிகம் இருந்தன.
அதன்பின், அக்ஷயா என்பவர் வீட்டில் பேசி அவரிடமும் சம்மதம் பெற்று வீடியோ கால் மூலம் நிச்சயமும் நடைபெற்றது. இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனுஷ் வீடியோ வெளியிட்டு தனக்கும் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல் அதில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 7) ஜப்பானில் படு கோலாகலமாக நெப்போலியன் மகன் தனுஷின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என பலருக்கும் நெப்போலியன் மகன் திருமணத்தில் கலந்து வாழ்த்து கூறியுள்ளனர்.
திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.