அருண் விஜய் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு வணங்கான் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !!

Update: 2024-11-19 08:55 GMT
அருண் விஜய் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு வணங்கான் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !!

அருண் விஜய் 

  • whatsapp icon

தமிழ் சினிமாவில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தில் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 6 ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

பிதாமகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருப்பதால் படத்தின் கதை குறித்த விவாதங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ( நவம்பர் 19 ) படத்தின் நாயகன் அருண் விஜய் தனது 47 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு வணங்கான் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி வணங்கான் படம் அடுத்த ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதைப் படக்குழு தெரிவித்துள்ளது. பொங்கலுக்கு அஜித் நடித்துவரும் 'குட் பேட் அக்லி', விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News