மறைந்த கேப்டன் விஜயகாந்த்-க்கு பத்ம புஷன் விருது !! வாழ்த்து தெரிவித்த சத்யராஜ் ,பிரபு ...

Update: 2024-05-10 07:24 GMT

சத்யராஜ் ,பிரபு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது மறைந்த நடிகருமான ,தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில்( மே 9 ) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் என் நண்பன் விஜயகாந்த் பத்மபூஷன் விருது கிடைத்ததால் எண்ணற்ற மகிழ்ச்சி அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ,தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ,எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எனக்கும் அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பாடல் வரிகளை கூறி அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் இருந்தாலும் ,மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

இதே போல நடிகர் பிரபு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் என் அன்பு சகோதரர் கேப்டனுக்கு விருது கொடுத்ததில் இந்த திரையுலகம் மிகவும் சந்தோஷமடைகிறோம் எங்களது அன்னை இல்லம் சார்பில் நான் அவரது குடும்பத்தாருக்கும் லட்சக்கணக்கான புரட்சி கலைஞரோட விசிறிகளுக்கும் எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள். கேப்டன் என்றைக்கும் எங்க மனசுல வாழ்ந்து தான் இருக்காறு கேப்டன் விஜயகாந்த் இந்த விருதை அளித்த மத்திய அரசுக்கு மிகப்பெரிய நன்றி என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News