பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் !!
சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எபிசோடில் ராதிகா கர்ப்பமாக இருப்பது தான் கோபிக்கு பரபரப்பாகி இருக்கிறது.
இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு நிற்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கு முன் அவருடைய முன்னாள் மனைவி பாக்யாவிற்கு தெரிய வந்துவிட்டது.
சரி இதை எப்படி தனது அம்மா ஈஸ்வரிடம் கூறுவது என தெரியாமல் பயத்தில் இருந்த கோபி தைரியத்தை வளர்த்துக் கொண்டு ஈஸ்வரியிடம் கூறிவிட்டார்.
இதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியில் உரிய உடனடியாக வீட்டிற்கு வந்து விட்டார். இதைப் பற்றி ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று பேசினார். இந்த குழந்தை வேண்டாம் என கூறிவிடுகிறார்.
ஆனால் ராதிகா இந்த குழந்தை வேண்டுமா ? வேண்டாமா? என்ற முடிவை நான் தான் எடுப்பேன் என கூறினாள்.
இதனால் ஈஸ்வரி கோபத்தின் உச்சகட்டத்திற்கு செல்கிறார். இவர்களிடையே வழக்கம் போல் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் கோபி. அடுத்து என்ன நடக்கப் போவது என்பதை பாக்கியலட்சுமி சீரியலை மறக்காமல் பாருங்கள்.