தனுஷ் களமிறங்கிய ராயன் - படத்தின் முன்பதிவு அமோகம் !!

Update: 2024-07-24 07:12 GMT

 ராயன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் ராயன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் திரையில் வெளியாகவுள்ளது. தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டராக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பலமுகம் கொண்ட தனுஷ் 2017 ஆம் ஆண்டு வெளியான பா.பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டார். அதைத்தொடர்ந்து ஏழு வருடங்கள் கழித்து தனுஷ் ராயன் படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

Advertisement

தனுஷ் தன் இரண்டாவது படத்தில் ஆக்ஷனை கையாண்டுள்ளார். படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலரை பார்க்கும்போதே இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியிருப்பதாக தெரிகின்றது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகப்படியாக இருப்பதால் இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் ராயன் தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் என்பதாலும், அவரே இயக்கி நடித்திருப்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதன் காரணமாக படத்திற்கு முன்பதிவும் அமோகமாக உள்ளது.

அந்த வகையில் ராயன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அமோகமாக உள்ளது. இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே முன்பதிவியில் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்திருக்கின்றது. எனவே ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழை தவிர பிற மொழிகளிலும் ராயன் திரைப்படம் வெளியாகின்றது. தனுஷிற்கு தெலுங்கிலும் மார்க்கெட் உருவாகியுள்ளது. எனவே கண்டிப்பாக ராயன் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags:    

Similar News