ராயன் திரைப்படம் ஆறு நாட்களில் செய்துள்ள வசூல்..

Update: 2024-08-01 12:00 GMT

ராயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ். அவர் இயக்கி, நடித்த அவரது 50 வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக ராயன் படத்தில் தனுஷ் பக்காவாக தெரிகிறார் என்பது ரசிகர்களின் பாராட்டாக உள்ளது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு கிடைக்காத மாபெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது என திரை வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.

Advertisement

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என பலரும் நடித்திருந்தனர்.

ஆறு நாட்களில் ராயன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் ரூ. 96 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.மேலும் 7 நாட்கள் முடிவில் இப்படம் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என உறுதியாக கூறப்படுகிறது. தனுஷ்-க்கு இப்படம் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக ராயன் அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது தெரிகிறது.

Tags:    

Similar News