ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு !!!

Update: 2024-10-01 04:50 GMT
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட   பதிவு !!!

ரஜினிகாந்த் 

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இன்று அவருக்கு பரிசோதனை தொடங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமாக ரஜினிகாந்தின் உடல்நிலை எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் உடல் சீராகவும் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் செல்லவில்லை என கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பே இதற்காக மருத்துவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை செய்து, அதன்பின்தான் பரிசோதனைக்கு முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் இருந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் என்கின்றனர். இதனால்தான் அக்டோபர் 1ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளவே, ஒரு நாள் முன்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News