ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு !

Update: 2024-03-30 10:38 GMT

மஞ்சும்மல் பாய்ஸ்

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

இந்தத் திரைப்படம் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அன்று வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வசூல் ரீதியாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி அடைந்தது.

Advertisement

மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா பிரபலங்களும் படத்தைப் பார்த்த நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Tags:    

Similar News