ரஜினிகாந்த் களம் காணும் வேட்டையன் வெறித்தனமான அட்வான்ஸ் புக்கிங் வசூல் !!

Update: 2024-10-09 05:50 GMT

ரஜினிகாந்த்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கி நாளை பிரமாண்டமாக ரிலிஸ் ஆகும் திரைப்படம் வேட்டையன். ரஜினி ஹீரோவாக நடித்து ரிலீஸாகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Advertisement

கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் வேட்டையன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஓப்பன் ஆகிய நிலையில் வெளிநாடுகளிலேயே பட்டையை கிளப்பி வந்த வேட்டையன் தற்போது உலகளவில் அனைத்து இடங்களில் அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலை குவித்து வருகிறது.

வேட்டையன் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், இதுவரை உலகளவில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாளே வேட்டையன் படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News