ராம் சரண் களமிறங்கிய கேம் சேஞ்சர் - ப்ரீ புக்கிங் வசூல் விவரம் !!
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரண் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். நாளை பிரம்மாண்டமான முறையில் வெளிவர உள்ளது.
இப்படத்தில் கியாரா அத்வானி, சுனில், சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி என முன்னனி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி, இதுவரை உலகளவில் செய்யப்பட்ட ப்ரீ புக்கிங்கில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கேம் சேஞ்சர். ஆனால், இது மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் வெளிவந்த மிகப்பெரிய படங்களான கேஜிஎப் 2, புஷ்பா 2, சலார், கோட் ஆகிய படங்களில் ப்ரீ புக்கிங் வசூலில் மிரட்டிய நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ புக்கிங் அந்த அளவிற்கு வசூல் இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.