இயக்குனராக களம் இறங்குவதாக தகவல் - யுவன் சங்கர் ராஜா !!

Update: 2024-10-17 05:30 GMT

யுவன் சங்கர் ராஜா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகமே அடிமை என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற தி கோட் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பது மட்டும் இல்லாமல் பல படங்களையும் தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திடைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குனராக களம் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, "தான் இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News