ஜீ-தமிழ் புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ரேஷ்மா !!!

Update: 2024-05-21 07:10 GMT

ரேஷ்மா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என்ற தொடரின் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

அந்தத் தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அப்படியே கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பான அபி டெய்லர்ஸ் தொடரில் நாயகியாக நடித்து வந்தார்.

ஆனால் தொடர் நீண்ட மாதங்கள் ஒளிபரப்பாகவில்லை தொடரை முடித்த கையோடு ரேஷ்மா விஜய் டிவி பக்கம் வந்தார்.

ராடான் மீடியா தயாரிப்பில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் முக்கிய இடத்தில் நடிக்க கிழக்கு வாசல் என்ற தொடர் ஒலிபரப்பாகி வந்தது.

ஆனால் தொடர் தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்த நிலையில் நடிகர் ரேஷ்மா முரளிதரன் நடிக்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷ்மா ஜி தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மற்றபடி சீரியல் குறித்த வைர இந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News