ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் திரைவிமர்சனம்.....

Update: 2024-02-20 09:21 GMT

சிங்கப்பூர் சலூன் 

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால், மீனக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். இதுவரை தமிழ் சினிமாவில் பல துறைகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். எதிர்பார்ப்பை இப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க....

தனது ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சா-வை பார்த்து முடி திருத்தம் செய்யும் வேலையின் மீது ஹீரோ ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆசை ஏற்படுகிறது அவரிடம் முடி திருத்தம் செய்யும் வேலையை கற்றுக் கொள்கிறார். படித்து முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என தன்னுடைய சொந்த சலூனை துவங்க வேண்டும் என ஆசைப்படும் ஆர். ஜே. பாலாஜி, கஷ்டப்பட்டு தனது சொந்த சலூனையும் ஆரம்பிக்கிறார். நினைத்தபடி சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூனை துவங்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு அதன்பின் பல சோதனைகள் வர தொடங்குகிறது.

இந்த சோதனைகளை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார், இதன்பின் என்ன நடந்தது? இறுதியில் தனது சிங்கப்பூர் சலூனை பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

Tags:    

Similar News