ரோமியோ திரைப்படத்தின் திரைவிமர்சனம் !!!

Update: 2024-04-11 10:35 GMT

ரோமியோ திரைப்படம் 

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷாரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விமர்சனம் :

விஜய் ஆண்டனி மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.

சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி ரவியை திருமணம் செய்துகொள்கிறார்.

Advertisement

ஆனால், மிர்னாலினி ரவிக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இதன்பின் தனது மனைவிக்கு தன் மேல் காதல் இல்லை, விருப்பம் இல்லை என விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர் என்ன செய்தார்? கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது. குறிப்பாக எமோஷனல் காட்சிகள் மற்றும் மனைவியிடம் சகித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் ஆண்டனி.

கதாநாயகி மிர்னாலினி நடிப்பில் குறை எதுவும் இல்லை. முழு கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்த நடித்த நடிகர், நடிகைகளும் திரைக்கதையோடு ஒன்றி நடித்துள்ளனர்.

படத்தில் சில பாடல்களை தவிர்த்து இருக்கலாம் , சில இடங்களில் மைனஸ் பாயிண்டாகவும் அமைந்துவிட்டது. பின்னணி இசை வேற லெவல். படத்திற்கு பலம் சேர்க்கிறது. ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள் அருமையாக இருந்தது என்று ரோமியோ திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை கூறி உள்ளனர்.

Tags:    

Similar News