நடிகை ராஷிகன்னா சினிமாவில் சம்பள பாகுபாடு !!

Update: 2024-06-04 06:20 GMT

 ராஷிகன்னா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சினிமாவில் கதாநாயகர்களுக்கு அதிக சம்பளமும், தங்களுக்கு குறைவான சம்பளமும் கொடுப்பதாக நடிகைகள் தொடர்ந்து புகார் தெரிவித்துக் கொண்டே இருகின்றனர்.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் படங்கள் வெற்றி பெறுவதால் அவர்களுக்கும், கதாநாயகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னாவும் சம்பள பாகுபாட்டை கடுமையாக கண்டித்துள்ளார்.

Advertisement

அவர் கூறும் ''சினிமாவில் சம்பள விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் இருக்கிறது. காலம் மாறும்போது அதிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.

மேலும் ராஷிகன்னா கூறும்போது, ''பேய் படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் இயக்குவது கஷ்டம். நான் தமிழில் ஏற்கனவே நடித்த 'திருச்சிற்றம்பலம், சர்தார்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இப்போது 'அரண்மனை 4' படமும் வெற்றியை சாதித்துள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தி தெரியும். இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளையும் புரிந்து கொண்டு என்னால் பேச முடிகிறது'' என்றார்.

Tags:    

Similar News