மெய்யழகன் திரைப்படத்தின் திரை விமர்சனம் !!
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியாகி திரைக்கு வந்துள்ள 27வது படம், "மெய்யழகன்".கோவிந்த் வசந்தா இசையில் யாரோ இவன் யாரோ பாடல் உருக வைக்கிறது மகேந்திரா ஜெயராஜ் வின் ஒளிப்பதிவு தஞ்சையின் அழகையும் இரவு காட்சிகளையும் ரசிக்க வைக்கிறது.
சொத்துப் பிரச்சினைகளில் பூர்வீக வீடு இழக்கிறது இதற்கு மேல் அங்கு வாழக்கூடாது என்று தஞ்சாவூரில் இருந்து தனது மனைவி, மகன், அருண்மொழி (அரவிந்த்சாமி) ஆகியோருடன் சென்னைக்கு குடிப்பெயர்கிறார். அறிவுடைநம்பி (ஜெயப்பிரகாஷ்) இருபது வருடமாக ஊருக்கு செல்லாமல் இருக்கும் அவர்களுக்குள் கோவம் இருந்தாலும் ஊர் பாசம் ஊறி கிடக்கிறது. இந்நிலையில் தன் மீது பாசம் கொண்ட மகள் புவனா (சுவாதி) சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் அரண்மொழிக்கு வந்தது. தங்கையை சந்தித்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஊர் செல்ல வேண்டிய நினைவுடன் செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பெயர் தெரியாத தன் மீது அத்தான் என்று பாசத்தை பொழிகிற அந்த இளைஞரின் (கார்த்தி) அன்பு மொத்தமாக கரைந்து போகிறார். தன்னைவிட அனைத்திலும் உயர்நிலைக்கும் இந்த இளைஞர் யார் அவர் அருண்மொழிக்கும் ஆன உறவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
உள்ளூரில் குடிகாரனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட அத்தை மகள் நான் உன்னையே கட்டி இருக்கலாம் என்ற ஏக்கத்துடன் அருண்மொழி இடம் கூறுவது தங்கையான கல்யாணப் பெண் அண்ணன் கொடுத்த கிஃப்ட்-டை மேடையிலேயே பிரித்து அணிந்து கொள்ளும் பாசம். பல வருடங்கள் கழித்து வருகின்ற அத்தானை ஏமாற்றி ஒருநாள் இரவு தங்க வைத்து விடுகிற மாப்பிள்ளையின் மகிழ்ச்சி என எமோஷனலாக கலகலப்பாகவும் முதல் பாதி கடக்கிறது.
இரண்டாம் பாதியில் வெண்ணிப் பறந்தலைப் போர், சோழனின் வீரம், ஈழப் போர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு திதி கொடுப்பது என படம் எடுக்கும் காட்சிகள் வசனங்களாக நன்றாக இருந்தாலும் அதன் நீளம் கதைகளும் தொடர்பில்லாமல் வரும் ஜல்லிக்கட்டு பொறுமையும் பெரும் சவால் ஆகி விடுகிறது. இயல்பான நடிப்பால் அதிகமான லைக்குகளை அள்ளிக் கொள்கிறார்கள் அத்தான் அரவிந்த்சாமி தன் மீது பாசம் வைத்திருக்கும் கார்த்தியின் பெயர் தெரியாமல் குற்ற உணர்ச்சியால் தவிக்கும் இடங்களில் கலங்க வைக்கிறார். எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டு வெள்ளந்தி மனிதராக நடிப்பில் மேலும் மெர்கேறி இருக்கிறார். கார்த்திக் இவர் ஒருவருக்குமான காம்பினேஷன் கட்சிதமாக பொருந்துகிறது. கார்த்தி மனைவியாக ஸ்ரீதிவ்யா, பாசக்கார மாமாவாக ராஜ்கிரன், அரவிந்த் சாமியின் மனைவியாக தேவதர்ஷினி ,அப்பா ஜெயப்பிரகாஷ் சரண், சக்தி என துணை கதாபாத்திரங்களும் நடிப்பும் கவர வைக்கிறது.