போலீசிடம் மாட்டிய முத்து ; கதறிய மீனா - இந்த பிரச்சனையிலிருந்து தப்புவார்களா !!

Update: 2024-10-08 05:40 GMT

சிறகடிக்க ஆசை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர் சிறகடிக்க ஆசை சீரியல்.

இன்றைய எபிசோடில் விஜயா, ஸ்ருதியிடம் திட்டு வாங்கிய காட்சியை ரசிகர்கள் அதிகம் ரசிக்கப்போகிறார்கள். அதாவது விஜயா, ஸ்ருதிக்கு வந்த பார்சலை பிரித்து அதில் இருந்த HeadPhones எடுத்து விஜயா மாட்டிக் கொள்கிறார்.

அதைப்பார்த்த ஸ்ருதி, என்ன தான் மாமியாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது, என்னோட பொருளை யார் என்னை கேட்காமல் எடுத்தாலும் எனக்கு பிடிக்காது என சத்தம் போட விஜயா ஆடிப்போகிறார்.

இன்னொரு பக்கம் முத்து-மீனா சத்யாவிற்காக அவரது கல்லூரி செல்கிறார்கள். சத்யாவிற்காக  முத்து-மீனா பேச போய் அது பிரச்சனை நடக்கிறது. முத்துவை போலீஸ் கைது செய்கிறார்கள், மீனா அவர் எதுவும் தவறு செய்யவில்லை என பெண் போலீசிடம் அழுது கதறுகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை சிறகடிக்க ஆசை சீரியல் பாருங்க.

Tags:    

Similar News