சிவகார்த்திகேயன் களமிறங்கிய அமரன் 4 நாள் வசூல் !!
By : King 24x7 Angel
Update: 2024-11-04 05:14 GMT
அமரன்
கடந்த அக்டோபர் 31ம் தேதி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெளியான திரைப்படம் அமரன்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக எடுக்கப்பட்ட படம் ஆகும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருந்த நிலையில் வெளியான நாள் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிஜ கதையை மையமாக கொண்டு வெளியான இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது.
4 நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 138 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.