சிவகார்த்திகேயனின் வெற்றிநடைபோடும் அமரன் - இத்தனை கோடியா !!!!

Update: 2024-11-07 04:59 GMT
சிவகார்த்திகேயனின் வெற்றிநடைபோடும் அமரன் - இத்தனை கோடியா !!!!

 அமரன்

  • whatsapp icon

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்ட முன்னனி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் தீபாவளி அன்று வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை அள்ளியது அமரன் படம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முதல் முறையாக ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் ராஜ்கமல் நிறுவனம் மூலம் உலகநாயகன் கமல் ஹாசன் இப்படத்தை தயாரிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்தார்.

உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், 7 நாட்களில் அமரன் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வந்துள்ளது. அமரன் படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்தது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News