சிவகார்த்திகேயனின் வெற்றி படமான அமரன் - 26 நாள் முடிவில் இத்தனை கோடி வசூல் !!
By : King 24x7 Angel
Update: 2024-11-26 04:55 GMT

amaran
சிவகார்த்திகேயன் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது அமரன்.
ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள அப்படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நிஜ கதையை மையப்படுத்தி சினிமாவிற்காக எதையும் புகுத்தாமல் அழகாக உருவாகியிருக்கும் இப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை சாதனை படைத்து வருகிறது.
தமிழகத்தில் இப்படம் ரிலீஸ் ஆகி 26 நாள் முடிவில் மட்டுமே ரூ. 158 கோடி வரை வசூல் சாதனை நடத்தியுள்ளது. வரும் நாட்களிலும் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.