எதிர்பார்க்காத நேரத்தில் சிவகார்த்திகேயனின் என்ட்ரி - சர்ப்ரைஸ் ஆன பிக் பாஸ் போட்டியாளர்கள் !!!

Update: 2024-10-26 06:20 GMT
எதிர்பார்க்காத நேரத்தில் சிவகார்த்திகேயனின் என்ட்ரி - சர்ப்ரைஸ் ஆன பிக் பாஸ் போட்டியாளர்கள் !!!

 Bigg Boss

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிக் பாஸ் 8 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில் இரண்டு வாரங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவகார்த்திகேயனின் என்ட்ரி அனைவருக்கும் சர்ப்ரைஸ் தந்தது.

இந்த நிலையில்,அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். பிக் பாஸ் 8ல் தனது அமரன் படத்தை ப்ரோமோட் செய்ய உள்ள வந்த சிவகார்த்திகேயன், போட்டியாளர்களிடம் படம் குறித்து பேசி, ட்ரைலரை பார்த்து, கேக் வெட்டி கொண்டாடினர்.

அமரன் படம் வெற்றி அடைய போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அமரன் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

பிக் பாஸ் இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன் பிக் பாஸில் கமல் சார் தான் இந்த படத்தை அறிவித்தார். அதனால் அமரன் படத்திற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அதிகம் நெருக்கம் இருக்கிறது என சிவகார்த்திகேயன் கூறினார்.

சிவகார்த்திகேயன் லுக் பற்றி ஆர்மியில் இருப்பவர் எப்படி தாடி வைத்திருப்பார் என பலரும் விமர்சனம் செய்தார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதற்கு பதில் தெரிவித்துள்ளார்.

"அது 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸ் என்று ஒரு ஸ்பெஷல் டீம். அவர்களுக்கு தாடி பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாகவும் சில நேரம் இருப்பார்கள். என சிவகார்த்திகேயன் கூறினார்.

Tags:    

Similar News