டாடா படத்தின் ஹீரோ கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் !!

Update: 2024-04-27 10:11 GMT

ஸ்டார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டாடா படத்தில் ஹீரோவாக கவின் நடித்துள்ள நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படத்திற்கு அடுத்ததாக இளன் இயக்கத்தில் "ஸ்டார்". என்ற படத்தில் கவின் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கியிருந்தார்.

ஸ்டார் படத்தில், கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ ஆகியவை சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வௌியாகவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டார் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. டிரெயிலரில் மிக அற்புதமாக நடித்து இருக்கிறார் கவின்.

ஒரு வளர்ந்து வரும் நடிகன் படும் அவமானங்கள், கஷ்டங்கள் அதனால் அவன் இழக்கும் நட்பு , காதல். சமூகம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது போன்ற காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளது.

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்திலும் கவின் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

Tags:    

Similar News