ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் இயற்கை எய்தினார் !

Update: 2024-12-19 09:31 GMT
ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் இயற்கை எய்தினார் !

Stunt master Kothandaraman killed 

  • whatsapp icon

சென்னையை சேர்ந்த நடிகர் கோதண்டராமன் (65) உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி நடித்து வெளிவந்த படம் கலகலப்பு. இப்படத்தில் சந்தானத்தின் கேங்கில் முக்கிய நபராக பேய் என்ற பெயரில் நடித்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார் நடிகர் கோதண்டராமன்.

உடல்நலக் குறைவால் பெரம்பூரிலுள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில் இயற்கை எய்தியிருக்கிறார். இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது. இவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கோதண்டராமனின் மரணம் திரையுலகில் உள்ள பலரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News