சுந்தரி சீரியல் நடிகை போதைப் பொருள் விற்பனை - விசாரனையில் அதிர்ச்சி !!
தமிழ் சின்னத்திரையில் சுந்தரி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் ஆர்யாவின் டெடி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவரை 5 கிராம் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இவரிடம் நடைபெற்ற விசாரணையில் இவர் வாட்ஸ் அப் குரூப் மூலம் சக நடிகர்களுக்கு போதைப் பொருட்களை விற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது என கூறப்படுகிறது.
1 கிராம் மெத்தம்பேட்டமைனை 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை 3 ஆயிரத்துக்கு இவர் விற்று வந்துள்ளார் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது.
இவர் யாரிடமிருந்து இந்த போதைப் பொருட்களை வாங்கினார், யார் யாருக்கு இதை விற்பனை செய்து வருகிறார் என்கிற விவரங்களை காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சக நடிகர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் திரை உலகில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.