சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூரி - விஷ்ணு விஷால் !!

சூரி - விஷ்ணு விஷால் சமரசம் போட்டோ வெளீயிடு.....;

Update: 2024-04-10 06:53 GMT
சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூரி - விஷ்ணு விஷால் !!

சூரி - விஷ்ணு விஷால்

  • whatsapp icon

திரையுலகத்தில் மிக பிரபலமாக உள்ள நடிகர்கள் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போதிருந்தே நண்பர்களாக பழகி வந்தனர்.

அந்த படத்தில் வரும் பரோட்டா காமெடி தான் சூரியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அந்த படம். அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்த நிலையில் சூரி அதில் பலவற்றில் சூரி காமெடியனாக விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ளார்.

குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட பல படங்களில் இந்த கூட்டணி நடித்து இருக்கிறது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடியும் பெரிய ஹிட் ஆன நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே ஒரு பெரிய சிக்கல் வெடித்தது. நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் அப்பா 2.7 கோடி ருபாய் வாங்கி ஏமாற்றிவிட்டார் என சூரி புகார் அளித்தார்.

நீண்ட காலமாக இருந்த இந்த பிரச்சனையில் தற்போது தீர்வு கிடைத்து இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு மூன்றாவது நபர் தான் காரணம் என தெரியவந்ததால் சூரி சமரசம் அடைந்து "நடப்பவை எல்லாம் நன்மைக்கே" என சூரி பதில் அளித்து உள்ளார்.

மேலும் சமரசம் ஆன போட்டோவை வெளியிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News