அனைவருக்கும் பெருநன்றியை தெரிவித்த சூரியின் பதிவு !!!

Update: 2024-06-08 06:18 GMT

சூரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த மே 31ஆம் தேதி வெளியான துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி மற்றும் சசிகுமார் உன்னி முகுந்தன் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மானத்தை பெற்ற சூரி அதை தொடர்ந்து கதாநாயகனாக கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகிய நாளிலிருந்து மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக 27 கோடி கடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கிராம மக்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு படத்தின் இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தற்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவித்து சூரி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News