சூர்யா களமிறங்கிய கங்குவா - முதல் நாளே இத்தனை கோடி வசூல் !!!

Update: 2024-11-15 05:07 GMT

Kankua

தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா திரைப்படமாக மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள 2024ஆம் ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. சூர்யா - சிவா கூட்டணியில் உருவான இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல் மற்றும் திஷா படானி முன்னனி நட்சத்திரங்கள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

Advertisement

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு என மொத்தம் 8 மொழிகளில், உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் நேற்று இந்தப் படம் ரீலிஸ் ஆகி இருந்த நிலையில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கங்குவா படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே கங்குவா படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14 கோடிக்கும் மேல் கங்குவா வசூல் செய்துள்ளது.

முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவிற்கு கங்குவா படம் வசூல் சாதனை படைக்கபோகிறது என்று பார்போம்.

Tags:    

Similar News