தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவு - கையோடு கார் வாங்கிய சீரியல் நடிகை நக்ஷ்த்ரா வெளியிட்ட புகைப்படம் !!
By : King 24x7 Angel
Update: 2024-05-20 07:27 GMT
நக்ஷ்த்ரா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த தொடர் தமிழும் சரஸ்வதியும் இந்த தொடர் மூலம் புதிய ஜோடியாக இணைந்து நடித்தவர்கள் தீபக் மற்றும் நக்ஷ்த்ரா விஜய் ,சன் மற்றும் ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி இருக்கிறார்.
தொகுப்பாளர் மற்றும் சீரியல் நடிகராக வலம் வந்துள்ளார். அதேபோல் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி பின் நடிகையாக களமிறங்கியவர் நக்ஷ்த்ரா. கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகி ஆக நடித்து வந்தார்.
தற்போது சீரியல் முடிந்த நிலையில் நடிகை நக்ஷ்த்ரா புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். இதனை தனது இன்ஸ்டாவில் புதிய காருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் பார்த்து வாழ்த்து கூறி வருகின்றனர்.