தல அஜித் களமிறங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு - லைக்கா நிறுவனம் தெரிவிப்பு !!

Update: 2024-07-22 08:39 GMT

 அஜித்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் மகிழ் திருமேனி, கதாநாயகன் அஜித் மற்றும் படத்தின் பணிபுரிந்த அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு, விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.    




 


Tags:    

Similar News