தளபதி விஜய் களமிறங்கிய goat படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் !!!!

Update: 2024-09-09 07:10 GMT

goat

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தளபதி விஜய் களமிறங்கி உருவாகி கடந்த வாரம் வெளிவந்த GOAT திரைப்படத்தின் வசூல் வேட்டை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிய புதிய படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய்யுடன் சேர்ந்த பிரஷாந்த், பிரபு தேவா சினேகா, லைலா என 90ஸ் திரைப்பிரபலங்கள் அனைவரும் நடித்திருந்தனர்.

GOAT படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பை பெற்று வருகிறது

இந்த நிலையில் 4 நாட்களை கடந்துள்ள GOAT திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இனி வரும் நாட்களில் GOAT படத்தின் வசூல் வேட்டை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News