தளபதியின் 69-வது படம் பூஜையுடன் இன்று தொடக்கம் !!!

Update: 2024-10-04 11:10 GMT

தளபதியின் 69

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் விஜய் களமிறங்கிய சமீபத்தில் வெளியான 'தி கோட்' ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அவரது 69-வது படத்திற்கான பூஜை இன்று நடந்தது.

விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மற்றும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

69 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்ற வேளையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவையும் விஜய் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News