சூப்பர் ஸ்டார் களமிறங்கிய வேட்டையன் படத்தின் வசூல் முதல் நாளே இத்தனை கோடியா !!!

Update: 2024-10-11 05:30 GMT
சூப்பர் ஸ்டார் களமிறங்கிய வேட்டையன் படத்தின் வசூல் முதல் நாளே இத்தனை கோடியா !!!

வேட்டையன்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இயக்குனர் TJ ஞானவேல் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து உருவான திரைப்படம் வேட்டையன். நேற்று உலகளவில் ரிலிஸ் ஆன இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மஞ்சு வாரியார், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என அனைவரும் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் படம் என்றாலே வசூல் வேட்டை அள்ளி விடும் என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

கண்டிப்பாக முதல் வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News