சூர்யா களமிறங்கிய கங்குவா திரைப்படத்தின் FIRE-song வெளியானது !!!

Update: 2024-07-23 08:29 GMT

 FIRE-song

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வெள்ளித்திரையில் டாப் நட்ச்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் தற்பொழுது வெளியானது.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே என ஒரு கூடத்தின் தலைவன் போருக்கு செல்வதற்கு முன் வெறியோடு பாடும் பாவனையில் சூர்யா நடித்துள்ளார்.

இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளனர் .இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News