தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்திய வேட்டையன் - எவ்வளவு தெரியுமா ??
By : King 24x7 Angel
Update: 2024-10-16 05:45 GMT

வேட்டையன்
ரஜினியின் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் வேட்டையன். சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, ரித்திகா சிங் போன்ற பேசக்கூடிய நட்சத்திரம் அனைவரும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார்.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகின இப்படம் வெளியாகி போட்ட பணத்தை விட அதிக அளவு வசூல் சாதனை படைத்து வருகிறது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை பற்றிய முழு விவரம் இதுவரை சரியாக வெளிவரவில்லை.
இப்போது வரை படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 86 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி உள்ளது.