திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியை Public Review/Talk நடைமுறையை தடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை !!

Update: 2024-11-20 06:36 GMT
திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியை Public Review/Talk நடைமுறையை தடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை !!

தயாரிப்பாளர் சங்கம் 

  • whatsapp icon

பதிய படம் ரிலிஸ் ஆகும் திரையரங்குகளில் யூடியூபர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் பார்வையாளர்களிடம் விமர்சனங்கள் எடுப்பது தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா ஆகிய திரைப்படங்களின் Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் வேண்டும்

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். என அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.

Tags:    

Similar News