ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பு நிறைவு
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 16:47 GMT

படப்பிடிப்பு நிறைவு
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்து படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.