என்னை பாதித்த கதை ‘வாழை’ - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி !!

Update: 2024-07-20 06:52 GMT

 மாரி செல்வராஜ் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்பவர் மாரிசெல்வராஜ். தற்போது 'வாழை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் திவ்யா மாரி செல்வராஜ், ஹாட்ஸ்டார் நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், ராம், தயாரிப்பாளர் தாணு, ரெட் ஜெயண்ட் செண்பக மூர்த்தி, தயாரிப்பாளர், நடிகர் ஜே.எஸ்.கே., இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்,நடிகர் கலையரசன், நடிகைகள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “முதன்முதலில் நான் படம் இயக்கலாம் என நினைத்த படம் ‘வாழை’.ரூ.50 லட்சம் இருந்தால் படம் எடுத்துவிடலாம் என்ற நிலையில் இருந்தேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாழை எனது சொந்த கதை.

என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது. என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட எனது கனவுப் படம் என்றார்.

Tags:    

Similar News