புஷ்பா 2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் - தற்போது மகன் மூளைச்சாவு !
By : King 24x7 Angel
Update: 2024-12-18 08:42 GMT
நடிகர் அல்லு அர்ஜுன் களமிறங்கிய மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா. புஷ்பா முதல் பாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
புஷ்பா முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகளவில் வெளியானது.
இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி தனது மனைவியுடன் வந்து அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்தார் . அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் அங்கேயே உயரிழந்த நிலையில் அவரது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.