மூன்று வருடத்தில் 32 கிலோ உடல் எடையை குறைத்தது இப்படிதான் - நடிகை குஷ்பு | கிங் நியூஸ் |cinema

Update: 2025-01-21 12:32 GMT

குஷ்பூ


நடிகை குஷ்பு தனது டயட் சீக்ரெட் பற்றி தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா இணையத்தில் உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பு . இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.


அதன் பின் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி இருந்தார். மேலும், சினிமா உலகில் 90 ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் காலகட்டத்தில் அதோடு ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் குஷ்பு தனது வெயிட் லாஸ் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில், நான் வெயிட் லாஸ் செய்வதற்கு மூணு வருஷம் ஆனது. லாஸ் மூணு வருஷத்தில் 32 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறேன். நான் எல்லா டயட்டையும் கடைப்பிடிப்பேன். நான் ஜிம் போவதை விரும்ப மாட்டேன். ஆனால், எனக்கு நல்லா நடக்க பிடிக்கும். நான் தினமும் காலையிலும் மாலையிலும் நடப்பேன். நான் சென்னையில் இருந்தாலும் சரி, ஹைதராபாத்தில் இருந்தாலும் சரி காலையில் 45 நிமிடம்கள் நடப்பேன்,


அதே மாதிரி மாலை நேரங்களிலும் 45 நிமிடங்கள் நடப்பேன். நான் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகள் மற்றும் எண்ணெய் உணவுகள் பிடிக்காது. நான் எப்போதுமே கொஞ்சமாக சாப்பிடுபவள் தான். அதே மாதிரி குளூட்டன் உணவுகளை நான் சுத்தமாக சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். எனக்கு டீ கேக் என்றால் பயங்கர இஷ்டம். அதைக்கூட சாப்பிடுவதை நான் நிறுத்தி விட்டேன். மேலும், நான் ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. எப்போதாவது சாப்பிடுவேன்.


ஆனால், சாக்லேட்கள் எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஒரு சாக்லேட் டப்பாவை என் ஃபிரிட்ஜ்குள் வைத்துவிட்டு, ஆறு மாதங்கள் கழித்து நீங்கள் அதைப் பார்த்தால் கூட அது நீங்கள் தான் இருக்கும். எப்போதாவது மூணு மாதத்திற்கு ஒரு தடவை அந்த மாதிரி ஒரு துண்டு சாக்லேட் சாப்பிடுவேன். ஆனால், எனக்கு இந்தியன் ஸ்வீட்ஸ் மற்றும் ஐஸ்கிரீம்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். நம் உடலுக்கு என்ன தேவை என்பதை நாம் தெரிந்து கொண்டால், நம் உடலை மெய்ண்டெயின் செய்வது ரொம்ப சுலபம்தான் என்று தனது எடை குறைப்பு குறித்து குஷ்பு கூறியிருக்கிறார்.


Tags:    

Similar News