Bigg Boss 7 Tamil: டைட்டில் வின்னரில் பிக்பாஸ் - முட்டிமோதிக் கொள்ளும் போட்டியாளர்கள்!

டிக்கெட் ஃபினாலேவுக்கான எலிமினேஷனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-27 17:50 GMT

Big Boss 7 tamil

தமிழில் ஒளிபரப்பாகி மக்களை அதிகமாக ஈர்த்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தான். கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7வது சீசனை தொட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் பிக்பாஸின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து, ஒரு மாதத்தில் 5 பேர் வைல்டு கார்டு எண்டிரியாக பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றனர். அதில் தினேஷ் மற்றும் அர்ச்சனா மட்டுமே இன்றும் போட்டியில் தாக்கு பிடித்துள்ளனர்.

சண்டை, சர்ச்சரவு, வன்மம், கோபம், அழுகை, நட்பு, காதல் என ஒட்டுமொத்தத்தையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் காட்டி இந்த சீசனை சுவாரசியப்படுத்தியுள்ளனர். அதனால், பிக்பாஸ் 7 சீசனுக்கு அதிக வரவேற்பு இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 86வது நாளை கடந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, மணி, ரவீனா, விசித்ரா, விஷ்ணு, அர்ச்சனா, விஜய், தினேஷ் மற்றும் நிக்‌ஷன் என 10 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் குதித்துவிட்டனர். இதில் விஜய் வர்மாவும் அர்ச்சனாவும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் விளையாடக்கூடாது என போட்டியாளர்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்ததால் இவர்கள் இருவரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது. 

இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதல் அதாவது நேற்று முதல் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நேற்று நடந்த போட்டி முடிவின் அடிப்படையில் விஷ்ணு மூன்று புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.​ இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

​தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஒரு டீமாகவும், மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சன் மற்ரும் விஜய் வர்மா ஒரு டீமாகவும் உள்ளனர். அதில், நிக்சன் முழுவதுமாக மாயா டீம்க்கு போனதாக விஷ்ணு பேசுகிறார். அப்போது குறுக்கிட்ட ரவீனா, முந்தைய சீசன்களில் இங்கிருந்து யாராவது எவிக்ட் ஆகி போனால் உண்மையா ஃபீல் பண்ணுவாங்க. ஆனால், இந்த சீசனில் யாராவது வெளியே போனால் அப்பாடா ஒருவர் வெளியே போயிட்டாருக்கு என்ஜாய் பண்றாங்க” ஆதங்கத்துடன் கூறுகிறார். 

அதே​ நேரம் மாயா, பூர்ணிமா, நிக்சன் விசித்ரா மற்றும் விஜய் டீம் ஜாலியாக பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் விஷ்ணு, தினேஷ், நிக்சன், ரவீனா, மாயா, விஜய், மணி இருப்பதால் அவர்களின் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளனர். அதேநேரம், ஃபினாலே டாஸ்கும் பிக்பாஸ் போட்டியாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. இதனால், போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News