வீட்டுக்கு ஏற்பட்ட கொடுமை பயத்தில் மொத்த குடும்பம் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் !!
விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் தனது வீட்டிற்கு வாங்கிய புதிய வீட்டிற்கு பெயர் வைக்கிறார்.
அந்த நேரத்தில் முத்து, மனோஜ், ரோஹினி, விஜயாவை கலாய்த்து பேசுகிறார்.
பின் மனோஜ் ஒரு காரியத்தை செய்கிறார். அதில் இன்னொரு ஹைலைட். அவர் செய்ததை பார்க்கும் போது முத்து சொல்வதை போல இவர் நிஜமாகவே படித்தானா என சந்தேகம் உள்ளது.
நாளைய எபிசோட் புரொமோவில், மனோஜ் தான் வாங்கிய புதிய வீட்டில் பேய் இருக்கிறதா என செக் செய்ய ஒருவரை அழைத்து வருகிறார்.
அவர் சொன்ன விஷயங்களை செய்தபோது வீட்டில் பேய் இருப்பதாக குடும்பத்தினர் அனைவரும் பயப்படுகிறார்கள்.
பின் மனோஜ் பேய் போக என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார், அவர் என்னவெல்லாம் சொல்லப்போகிறார், என்ன நடக்கிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.