நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் அப்டேட் .....

Update: 2024-04-05 11:30 GMT

கோட்

'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.

Advertisement

இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் ஒரு குழந்தையை கொஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலகி வருகின்றது.

இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.

Tags:    

Similar News