விதார்த் நடித்துள்ள அஞ்சாமை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் விதார்த், வாணி போஜன் நடித்துள்ள அஞ்சாமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது, இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

Update: 2024-05-28 16:48 GMT

அஞ்சாமை 

நடிகர் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். 

  இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகிறது. படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது

தணிக்கை குழு வாரியம். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதே போல், ட்ரைலரில் வரும், ‘தேர்தலுக்கு முன் கையெடுத்து கும்பிடுவது நீங்கள், தேர்தலுக்கு முன் குணிவது நாங்களா’, ‘கல்விய கஷ்டப்பட்டுத்தான் படிக்கனுமா, கஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி இந்த சிஸ்டத்த ஏன் உருவாக்கி வச்சிருக்காங்கன்னு நாம என்னைக்காவது யோசிச்சிருக்கோமா’ எனப் பல அழுத்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

Tags:    

Similar News