மகாராஜா திரைப்பட இயக்குனருக்கு முத்தம் கொடுத்த விஜய்சேதுபதி - வீடியோ வைரல் !!

Update: 2024-06-15 09:40 GMT

விஜய்சேதுபதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியான நிலையில் தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஜா பட இயக்குனர் சாமிநாதனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உன்னோட சேர்ந்து படம் பண்ணதில் எனக்கு பெரும் சந்தோஷம். படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே சொன்னேன் படம் வெளியானதும் இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுறோம். I Love You என்று இயக்குனருக்கு முத்தம் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News