பல கலைஞர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கொடுத்த ரியாலிட்டி ஷோ தொடர போவதாக விஜய் டிவி அறிவிப்பு !!!
By : King 24x7 Angel
Update: 2024-11-21 07:01 GMT
kpy
விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் எவ்வளவு முக்கியமோ அதை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் தான் அதிகம் பிரபலம். அதிகம் மக்கள் ரியாலிட்டி ஷோக்களை தான் விரும்புகின்றனர்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபலமான ஷோ. இந்த ஷோ மூலம் பல கலைஞர்களுக்கு வெள்ளித்திரையில் வாழ்க்கை கொடுத்த ஒரு ஷோ என்றே சொல்லலாம் அது கலக்கப்போவது யாரு தான்.
இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நடத்து முடிந்த நிலையில் எல்லோரும் அதிகம் எதிர்ப்பார்க்கும் கலக்கப்போவது யாரு 10வது சீசன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய கலக்கலான புரொமோவுடன் கலக்கப்போவது யாரு 10வது சீசன் தொடர போவதாக விஜய் டிவி அறிவித்துள்ளனர். இந்த காமெடியான புரோமோ வைரல் ஆகி வருகிறது.