விஜயா, எனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நான் வர முடியாது - சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ !!

Update: 2024-11-13 05:02 GMT

சிறகடிக்க ஆசை சீரியல் 

சீரியல்கள் எல்லாமே மக்கள் ரசித்து பார்க்கும் அளவிற்கு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது சொல்லலாம்.

அப்படி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் ஒன்று ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.

இன்றைய எபிசோடில் விஜயா சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிவிட்டார் என்று கூறி மீனா மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Advertisement

ஆனால் ரோஹினி எப்படி வாபஸ் வாங்கினார் என குழம்ப, சிட்டியும் சத்யா தப்பித்தது பற்றி அறிந்து கோபம் கொள்கிறார்.

பிரச்சனை சுமூகமாக முடிய விஜயாவை வீட்டிற்கு வர கூறி முத்து மற்றும் மீனா பார்வதி வீட்டிற்கு செல்கிறார்கள். விஜயா எனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நான் வர முடியாது என சொல்கிறார்.

உடனே முத்து, பார்வதியிடம் இப்படி தான் அப்பாவின் நண்பர் மனைவி அம்மாவை போல கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் கூப்டு கூப்டு பார்த்தும் அவங்க வரல அதனால விவாகரத்து செய்துவிட்டார் என சொல்ல,

இதனை கேட்டு விஜயா ஷாக் ஆகிறார், அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம். 

Tags:    

Similar News