அஜித் இப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என பேட்டியில் கூறிய விஜய்யின் அம்மா !!

Update: 2024-06-10 06:43 GMT

அஜித் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து பட வேலைகளை முடிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.

இப்படத்தை விஜய் கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக தகவல் இன்னும் வெளியாகவில்லை. சில வாரங்களுக்கு முன் விஜய் தனது பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படம் செம வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

Advertisement

அதில் ஒரு பேட்டியில் ஷோபா அவர்கள் பேசும்போது குஷி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அஜித் குமார் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் பேசியது, விஜய்யும் நானும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்திருந்தோம் அப்போது விஜய் வீட்டில் இருந்து எனக்கும் உணவு வரும். சோபா அம்மாவின் கையில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். அதை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார். அவர் மேடையில் அப்படி பேசுவார் என நான் எதிர்பார்க்கவில்லை என்று விஜயின் அம்மா சோபா கூறியுள்ளார்.

Tags:    

Similar News